மூச்சுப் பயிற்சி ( கவிதை ) : ஜமுனா கிருஷ்ணராஜ்

யோக வகுப்பில் எங்களிக்கப்பட்டது
மூச்சுப் பயிற்சி
அதாவது மூச்சை உள்ளிழுத்து வெளியே மெதுவாக விட வேண்டிய பயிற்சி.

அப்போது நான் மூச்சின் வகைகளை உணர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அன்றாடம் நாம் ஓயாடி
மூச்சிறைக்க வேலை செய்கிறின் விரைவது பெருமூச்சு.
குழந்தை பிறந்த பின்னர்
அதன் முதல் மூச்சில் மகிழ்ந்து நாம் விடுவது நிம்மதி பெருமூச்சு.

மாக படர்ந்த குழலில் தினறும் நம் மூச்சு
மூச்சை பிடித்து கடும் உழைப்பின் பின் நாம் வாங்குவதும் மூச்சு.

ஆனால் சுகம் தரும் குழலில் நாம் விரிவதே இன்பப் பெருமூச்சு.

ஆகையால் பிறப்பு முதல் இறப்பு வரை உள் வாங்கி வெளி விடும் நாம் செய்வதும்
மூச்சுப் பயிற்சியே
இந்த நல்ல பணியின் அயர்ச்சியில்
நாம் விடும் கடைசி மூச்சுதான்
மறு ஜென்மத்தின் தொடக்கமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate This Website »